- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
பரமபதி துணை.
திருமாலிருஞ்சோலைமலை
அழகர் வருகைப்பதிகம்
திருப்போரூர்
டி. கோபால் நாயகர்
அவர்களாற்றமது
மதறாஸ், என். சி
கோள்டன் அச்சியந்திரசாலையிற்
பதிப்பிக்கப்பெற்றது.
1914
17-18 காளத்தியப்ப முதலி வீதி மதராஸ் என். சி
அழகர் வருகைப்பதிகம்
காப்பு - வெண்பா
சிலையைமுன்னாள்
மின்னாகச் செய்தபெரு மான்சோலை
மலையழகர்
மீதுகவி வாழ்த்தவே--கலைமுனிவன்
வெம்பிக்கை
யால்ப்புடைக்க மேவுமவ னைத்தடுத்தாள்
தும்பிக்கை
யாழ்வார் துணை.
விருத்தம்
கண்ணன்வருக
வுலகளந்த கடவுள்வருகக் கார்மேக
வண்ணன்வருக
ராவண சம் மாரன்வருக மண்ணையுண்ட
திண்ணன்வருக
யெங்கள்குல தெய்வம்வருகச் சிவன்றேவி
அண்ணன்வருக
சோலைமலை அழகன்வருக வருகவே. (1)
மெய்யன்வருகப்
பரமபத வேந்தன்வருக வீணருக்குப்
பொய்யன்வருகச்
சோதைதரும் புகல்வன்வருகப் பொருந்தும்வளைக்
கையன்வருகச்
சிறியேனென் கண்முன்வருகக் கடலடைத்த
ஐயன்வருகச்
சோலைமலை அழகன்வருக வருகவே. (2)
மாயன்வருக
வெண்ணையுண்ட வாயன்வருக. வணங்குமன்பர்
நேயன்வருகப்
பெண்வடிவாய் நின்றான்வருக நிதிகொடுக்குந்
தூயன்வருக
யிரவிகுல சோமன்வருகச் சுந்தரஞ்சேர்
ஆயன்வருகச்
சோலைமலை அழகன்வருக வருகவே. (3)
முத்தன்வருக நான்மறைக்கு முதல்வன்வருக மூவுலகுங்
கத்தன்
வருக வெனவணங்குங் கடவுள்வருகக் கதியளிக்குஞ்
சுத்தன்வருகப்
பாண்டவர்கள் தூதன்வருகத் தொண்டர்தங்கள்
ஆண்டான்வருகச்
சோலைமலை அழகன்வருக வருகவே. (4)
பூண்டான்வருகத்
துளபமணிப் புனிதன்வருகப் பொய்யர்பணி
வேண்டான்வருகத்
தொண்டர்பிழை விரும்பான்வருக
விரிந்தபுகழ்
நிண்டான்வருக
யெங்குமொன்றாய் நிறைந்தான்வருக நீள்கயத்தை
ஆண்டான்வருகச்
சோலைமலை அழகன்வருக வருகவே. (5)
முடித்தான்வருகப்
பாரதப்போர் முகுந்தன்வருக முனைந்துவில்லை
ஒடித்தான்வருகக்
கஞ்சன்பகை யொழித்தான்வருக வுரகமிசை
நடித்தான்வருக
ஜானகிக்கோர் நாதன்வருக நயந்துதொடை
அடித்தான்வருகச்
சோலைமலை அழகன்வருக வருகவே. (6)
ஜோதிவருகத்
தென்புதிடஞ் சொல்லவருகத்
துரைவருக
நீதிவருக
மனத்துயரம் நீக்கவருக நேசரணு
பூதிவருகக்
கருணைமழை பொழியவருக புகழுமறை
ஆதிவருகச்
சோலைமலை அழகன்வருக வருகவே. (7)
பெருமைவருக
யெனையாளெம் பெருமான்வருகப்
பேசரிதாம்
ஒருமைவருகத்
திருமார்பி லுறைந்தான் வருக
வுண்மை சொல்லக்
குருமைவருக
மலையெடுத்த கோமான் வருகக் கோருமெங்கள்
அருமை
வருகச் சோலைமலை அழகன் வருக வருகவே (8)
விமலன்வருக வணங்குமன்பர் விகிதன்வருக மேன்மைதருந்
தமலன்வருக
யெனையாளென் சாமிவருகத் தயைவருக
நிமலன்வருகப்
பாண்டவர்கள் நேசன்வருக நினைக்குமுன்னே
அமலன்வருகச்
சோலைமலை அழகன் வருக வருகவே (9)
மருவேவருக
மணமிகுந்த மலரேவருக வாக்குதவுங்
குருவேவருகப்
பூமடந்தை கொழுநன்வருகக் குற்றமிலா
உருவேவருகப்
பொய்யர்மனத் துறையான்வருக வோடியென்முன்
அருகேவருகச்
சோலைமலை அழகன் வருக வருகவே (10)
நன்றேவருகச்
சுகமுதவும் ராமன்வருக நாடியென்முன்
இன்றேவருகக்
ககபதிமீ தேறிவருக யெங்கும்நிறை
ஒன்றேவருக நிஜதாஸ
ருறவேவருக வுனைக்கருதும்
அன்றேவருகச்
சோலைமலை அழகன் வருக வருகவே (11)
அழகர் வருகைப்பதிகம்
முற்றிற்று
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment