திருமாலிருஞ்சோலைமலை அழகர்பேரிற் கமலவிடு தூது


Original digital copy of the book link

ஸ்ரீகிருஷ்ண சகாயம்


திருமாலிருஞ்சோலைமலை
அழகர்பேரிற்
கமலவிடு தூது


காப்பு - வெண்பா.


செல்லுங் கடலுநிகர் ஸ்ரீபதிவாழ் மால்மீதிற்
சொல்லுங்கமலவிடு தூதுக்குக் - கல்விக்
குருகையானேயன்பு கூர்போல்வருதேன்
குருகையானேயன்பு கூர்.


கமலம் உற்பத்தி கமலவர்ணை


நீர்பூத்தல்கொண்டல் நிறக்கடவுள் விண்ணோர்க
ளேர்பூத்தவேதா யிராக்கதர்கள் சீர்பூத்த 1


வெண்பாலலையில்வந்து வெண்கதிரே தூணாக
நண்பானவாசுகியே நாணாகப் பண்பான 2


மந்தரமேமத்தாக வாருதியைத்தான் கடையிற்
சுந்தரமாய்த்தானிருபாற் றொல்லையிலே வந்திருமால் 3


ஆனையபிஷேக மவைபுரியவன்புடனே
வானவர்கள் நின்று மலர் தூவக் கானயிசை 4


கந்திருவர்பாடக் கமலைக்கரத்திடமாய்
வந்துற்பவித்த மலர்ச்செல்வி கந்தை 5


கமலமேமைசொரியிற் காசினியிலோற்
கமலமோ அந்தமல் லிகையோ கமலைக் 6


கருளும்விழிமால்கேள்வ னானதனாலுந்தன்
மருமகனோமாயன் வழுத்தாய் மருகனுக்குப் 7


பேசுவையோ நாணுவையோ பேசாக்காலவ்விழியிற்
றேசுபெறவே சேர்ந் திருப்பாயோ மாசகலும் 8


பத்துப்பொருத்தமதிற் பாராமற்பேயனென்று
சித்தத்தினில்முறையுஞ் செப்பமுடன் வைத்துமனம் 9

எண்ணாமலுன் மகளை யீய்ந்தா யயனளப்புப்
பண்ணா கலம்மகளைப் பத்திரமாய்த் தண்ணாரும் 10


நாவிற்றரித்தாரே  நாணமிலையோ அரர்க்கும்
பூவிற்றவம் நீசெய் புண்ணியமோ நாவிற் 11


றரித்ததுடன் விட்டனரோ சம்புவுனக்கன்பாய்த்
தெரித்தமகனாகச் செனித்தாரோ பொருத்த 12


அரிக்குமகளை யளித்தாயானாலும்
அரிக்குத்துணைவியென அன்பாய் விரித்துன் 13


னிதட்டேனுதவி யினிதாய்த்துவண்டங்
கிதத்தோடுறங்க யிருப்பாய் இதைப்புவியிற் 14


பொன்னொருக்திமேவும் புதுமலரே நின்போலப்
பின்னொருத்திசெய்தாற் பெருமையோ பின்னொருத்தி 15


செய்தாலவர்களுக்குச் செல்லுமோ நீயென்ன
செய்தாலுமுந்தனுக்குச் செல்லுங்காண் கைதைதனை 16


இட்டவகையாய்ச்சிரத்தி லெல்லவருங்கொள்வதுன்பே
ரிட்டவகையாலோ யியம்பிவிடாய் திட்டமுடன் 17


ஆட்டிவிக்கும் நட்டுவனா ரங்கைதனிலுன்னைவிடில்
நாட்டியத்தில்நல்ல நலமாமோ கூட்டுமணத் 18


தம்புய மேபொன்மா யவன்பாலிற்சென்றாலும்
அம்புயத்தைவிட்டங் ககன்றாவோ தும்பி 19


மறுகாலை போன வழியில்வாராதுவர
அறுகால்நடக்கவசமாமோ நறுமலரே 20


(
கமலத்துக்கும் விஷ்ணுவுக்குஞ்சமானம்)


வாகானகோகுலந்தான் மாயனிடஞ்சென்றுரைத்தால்
ஆகாதிவையென்றறைவரே காகம் 21


மிக்கவஞ்சிதன்னை விளம்பினால்விஸ்தாரம்
புக்கவிரித்துப்புகலாதே மெய்க்கவரும் 22


முத்திலகுவாயருளு முக்கியத்தால்மாலானோர்க்

கத்திருவைநல்குமழகினால் நித்தியமாய் 23


வண்டும்பொனும்பூமங்கையுமவ்வாழியுமேற்
கொண்டுஞ் செறிந்ததனாற் கூரியால் மண்டிச் 24


செகத்தோரிற்கட்கமலச் சித்திரத்தினாலே
பொகுட்டாகவொன்றெடுத்தபொற்பால் மிகுத்தநெடு 25


(
வித்துவானுக்கு சமானம்)


வான்மைமுடிவாணிகேள் வன்றனையனான தனால்
மேன்மைபெறும்வைகுந்த விஷ்ணுவும்நீ வானோர் 26


மனத்திற்றுதிக்கும் வான்முதலாய்த்தேடும்
அனத்துக்குமனை மளிப்பாய் வனப்பிசைந்த 27


அந்தாதி லட்சணமாமன்னேமிநாதமுடன்
சிந்தாமணிசேர்ந்த சித்திரத்தால் நந்தாத28


காரிகையைமாமடலைக் காதலுடன் வெண்பாவை க்
காரிகையைச்சங்கெனநீங் காததினாற் சீரிலகும் 29


ஏடுவாசிக்கு மெழிலாற்பெருங்கவிஞன்
பாடுங் கவிதை படிக்கவே நாடிவரும் 30


கற்றுச்சொலியெனவே கார்வண்டு பாடுதலால்
உற்றுச்சொலிற்றேனுறைவாணி பெற்று நிதம் 31


வீறுடனே மேவுதலால் விஞ்சையரில் மேன்மைபெறக்
கூறும்பிரமகுலக்கவிஞரீறில் 32


நிதியொன்பதுதனிலே நீயுமொன்றானாலும்
பதுமநிதியென்றே பகரும் விதமெனவே 33


அளிக்கும் நிதியெட்டில் திகம் நீயென்றோ
அளிக்குமளிப்பதனாலன்றோ களிக்கநிதம் 34


எந்தனுக்கிப்போ திங்கிரண்டுதானாண்மலரே
உந்தனுக்கிங்காயிரம் போதுண்டோகானந்த 35


அலைபோல்வளைக்கண்ணரிவையற்குக்கண்போல
முலைபோற்கரம் போல்முகம்போல் நிலையாய் 36


(
வர்ணை)


அனவரையுநெஞ்சி லருட்டிமயக்கிக்
கனமுகில்போல் நீ டுமளகத்திற்கனமாக 37


உள்ளிருந்துவாசமெனு மோர்கயற்றினாலிழுத்திங்
கள்ளிருந்தகண்முகலாமைம்புலனுங் கொள்ளறிவை 38


கட்டிப்பறித்துமிகு காசுபணமுள்ளதெலாங்
கொட்டியயில்போல்வளர்கண் கோதையரைக்கட்டி 39


தழுவிலவர்மாயவலை சார்பாக்கினித்தீயின்
மெழுகாயுருக்கும்விநோதா பிழுதலுகர்ந் 40


தேனுனதுதேனையுண்டுஞ் செம்மையாலிப்புவியின்
றேனினுமுன்றேனினிப்புச்சேர்ந்ததுவோ ஆன 41,

ஊடிற்களங்கமென வோர்வண்டிருப்பதனால்
நாடிக்கனமினஞ்சூழ் நட்பினால் நீடியவே 42


(
சந்திரனுக்குச்சமானம்.)


ணிக்குளரன்றரிக்கும் நேசத்தாற்றூயமுகத்
துக்குநிகர்வைத்துரைக்குஞ் சோம்பினால் மிக்கபொன்போல் 43


அம்மானிருக்கையினா லம்பரத்திலேயுலவி
இம்மானிலங்கைக்கு மிந்துவும் நீ சும்மா 44


கலைஞர்பூவென்று கழறலால்மாயன்
றலைவியோமாமியோதானோ குலவிவரும் 45

(இராஜாவுக்குச்சமானம்)


சங்கந்திகழுதலாற் றண்மையுடன் வையமதிற்
பொங்கமுடன் மேவும் புதுமையினாற் சங்கைபெற 46

மாக்கள் சுமப்பதனால் வாணர்வந்துபாடுதல்போல்
மாக்கரியவண்டிசை செய் வண்மையினால் வாக்குடனே 47


பாடிவந்தோனுக்குப் பரிசளித்தல்போலளிக்குங்
கூடிமதுவீயுங் கொடையினால் நாடிவளர் 48


தும்பிதனைமேவுதலாற் றொல்லுலகிலெல்லோரும்
நம்பவுதவுமகா ராஜனும் நீ வம்பின் 49


கமலங்கா தேயங்கரையநீதான
கமலங்காதேயென்பார்காணே னமல 50


(
கல்யாணபுருஷனுக்குச்சமானம்)

உயர்கோடி கொண்டுகால லூசலாடித்தந்
துயரகல ஆசை துடர நயமாக 51


என்றுமலர்மாலை யிசைந்துமணஞ்செய்வதனாற்
பொன்றருங்கல்யாணபுருஷா யென்றும் 52


சிலர்சிரசில்வைக்கச் சிலர்மார்பில்வைக்கச்
சிலர்கையிற்கொண்டு ஜெபஞ்செய்ய, நலமணிதந் 53

(புண்யபுருஷனுக்குச் சமானம்)


தக்களங்கன்றன்முகம்பா றாமலதிநேமனதி
புக்கிநிதம்வாசஞ்செய் புண்ணியா இக்குவினில் 54


ஆரூர்க்குமுன்பேர்வைத் தன்புடனே சொல்லாக்காற்
றேரூரழகுதிகழாதே யாருமந்த 55

அம்புலிக்குங்கூடலிலோ ரற்புதவாவிக்குமுன்பேர்

சொம்புபெறயிட்டுத் துதிசெய்வார் பம்புவனப் 56


கமலவர்ணைமுற்றிற்று


நாயக வர்ணனை


பூகரஞ்சேர்மாயவனைப் போற்றியெய்தப்போயூரில்
மாதரம்பற்றூற்றும் வகைசொல்கேன் ஆசிநூல் 57


நாதமாய்விந்துவாய் ஞானாந்தமாயுணரைம்
பூதமாயைந்துபொறியாகி வேதமகிழ் 58


சோதியாய்மூலமாய்த் தொல்லுலகோர்கொண்ட கொள்கைக்
காதியாயாருமறியாப்பொருளாய் மூதுலகை 59

யாக்கவயனாகி யாதரிக்கத்தானாகிப்
போக்கவரனாகப் போந்தருள் வோன்றாக்குடைய 60


அண்டமணுவாகவணு அண்டமாகப் பெரிதாய்க்
கண்டவர்காணாச்சிறிதாங் காரணத்தான் றுண்டமதி 61


மாலப்படைகிடக்கும் வார்சடைசேர்நக்கனுக்குச்
சூலப்படை கொடுத்துத்தொண்டுகொண்டோன் நீலகண்ட 62


னற்பித்தருளுமன நான்முகர் கேட்கிற்றொழிலைக்
கற்பித்தருளுங் கனிவாயன் பொற்கமலத் 63


தன்பாதமேல்விசைன் சாற்றுமலரீசன்முடிக்
கன்பாதலாற்பண்டறிவித்தோன் முன்போர்ந்து 64


புண்ணியமேபூசித்த புண்ணியவான்மாயைப்
பண்ணிய மூலப்பரஞ்சோதி திண்ணுலகில் 65


எள்ளிலெண்ணெய்போலவேதா னெங்குமுளோனானையுண்ட
வெள்ளில் போலெங்குமிலா விந்தையினான் றெள்ளியோர் 66


முக்காலுஞ்செய்யு முறைகடனாமந்தரத்தி
லெக்காலுமுன்புகல் பேரே கொண்டேன் மிக்க 67


பெரியோர்களெச்செயற்கும் பீடுடன் முன்னாக
அரியோனெனச்சொலுமெனய்யன் றிருமலரின் 68


(
நவக்கிரகச்சேர்க்கை)


அந்தணன்போற்றுமா கவனெங்கள் மீதினிலே
சந்திரன் செவ்வாயனற்புதன் புகழுங் கந்திருவர் 69

தங்கவியாழன்வலச் சக்கரமிஞ்சுக்கிரன்மா
மங்கிகழ்வாயென்னை வசனியான் பொங்கு 70
சதிராகுவாகனனார் தாமெழுதுங்காயைக்
கெதிரான ஐவர்சமர்க்கேதும் மதியானாம் 71

(ராசிச்சேர்க்கை)


மேடம்புயக்கண் மின்னார் மென்று நில் தூக்குமிடபன்
கேடிலானேமிதுனங் கேவலத்தான் நீடு 72


கடகஞ்சேரும்வேங் கடவெற்புநாதன்
றிடஞ்சேரழகிய சிங்கன் வடிவான 73


கன்னிரந்தகண்டிகையன் காதுலாங்குண்டலத்தான்
றன்னவிருச்சிகந்தத் தண்டுளவன் முன்னமொரு 74

சந்தனுவின் றேவிவந்த தாளினான் றானுறையும்

நனந்தனுவகையுயர் நற்றனுவன் முந்தை 75


மகரஞ்சிதந்தகும்பன்மாலாயிரம்பெயரிற்
றிகழ்மீனம்போலவுருச்சேர்ந்தோன் புகழ்மறைசேர் 76


வேதவிய தன்பணிவோன்மிக்கவிசாரத்தினில்யா
னேதவியாதன்பணிவோனின் பருள்வோன் போதஞ்சே 77


ரெட்டக்கரத்தாரிருமலையார் நெய்யுறிமீ
தெட்டக்கரத்தாரிருமலையா ரிட்டத் 78


திருக்கோட்டியூரரவஞ்சேராதெனது
திருக்கோட்டியூரரவஞ்சேர்ந்தோர் செருக்காம் 79


அயோத்தி நகர னயனாருரைக்கு ம்
அயோத்திநகரழைகன் றயாநிதியாய் 80


பார்த்து நினைத்துப்பார் பறிப்பமீனா மை
மூர்த்தியெனலாமாதிமுலத்தான் சீர்த்தி 81


(
கற்பனைச்சேர்க்கை)


வடமதுரையார்க வடமதுரையார் வா
யிடமதுரையாய்ச்சியருக் கீய்ந்தோன் சடைசேர்ந் 82


தராவணனைத்தன்னாளனுமனாகக்கொண்ட
றிராவணனைவென்றயிராமன் கிரதமொல்ல 83


கங்கைக்கரையநேர் காசினியன்றாளில் வந்த
கங்கைக்கரையநேர்காசினியன் வெங்கடுவின் 84


வாசுகிமுறைந்தவிடம் வாரிமுற்றுமுண்டுகொஞ்சம்
பேசுகிரீசற்களித்துப் பேர்கொடுத்தோன் மாசிலாக் 85


கண்ணன் மதி பானுவெனுங் கண்ணனெந்தன் வாக்கெனுமோர்க்
கண்ணனிசைப்பயில்கைக்கண்ணனிரங் கண்ணன்மறைப் 86


பண்ணினானெந்தனையாட் பண்ணினான் காவிரிநாப்
பண்ணினானென்மேலன்பெண்ணினான் பண்ணினான் 87


சங்கத்தான் சூரியதே சங்கத்தான்முத்தமிழ்ப்பிர
சங்கத்தானைந்தலைப்பு சங்கத்தான் சங்கத்தான் 88


வாராகவாவெனச்சொல்வாராகன்வாராகன்
வாராகன் கீர்த்துவாராகன் வாராகன் 86


தானத்தான்புத்திரசந் தானத்தானானாகுந்
தானத்தான் மூவருட்பிர தானத்தான் றானத்தான் 90


(
சந்தச்சேர்க்கை )


சத்துவகுணத்துமெய்த்த சற்குணத்தனுத்தமத்தன்
அத்தணத்தவிற்றெரித்த அற்புதத்தன் அத்தியக்கன் 91


அப்பனுக்குமப்பனுக்குமப்பணத்தியைத்தவிர்த்து
முப்பொருட்கு முற்பவித்துமுக்யமுற்று மிபுவிக்குள் 92


மட்டிறத்து வப்பாப்ர மத்தினுக்கிரத்துருக்க
ணிட்டுநிற்கரசுநற்கிசைத்தகிர்ஷ்ணன் எட்டெழுத்தன் 93


வட்சமுற்றபொற்கவுத்துவத்திரன்விஷ்ணு அஷ்ட
அட்சன்மெச்சுமுற்புதித்த அக்கரத்தன். இட்சுவிற்கொள் 94


சித்திரத்தில்மிச்சமுற்றசித்தசற்குமத்தன்மெய்ச்செல்
வத்திலக்குமிப்புயத்தமைத்தகர்த்த னித்தலத்தில் 95


ஆதரித்தபேர்கள் நித்தமாருமிஷ்டமேபெறக்கண்
மீதருட்களே கொடுக்கும் வீறகத்தான் தீதகற்றும் 96


நேமநிஷ்டைமாதவத்தால் நேயம்பைத்தசோதிதுஷ்
மாமனைக்கொல்வோர்பிரசித்தா மாமகத்தர் பூமி 97


இரந்துமளந்துமிடந்து மிசைந்து
புரந்துமிரங்கல்புரிந்தும் விரும்பியதை 98


உந்திபெறும்படியுண்டு மகிழ்கின்ற மாமாயர்
அந்த அரங்கமமர்ந்தவர் முந்து 99


களவிலிழுது கவர்வனுகர்வன்
அளவில் பிரபையனழகன் வளமை 100


அமரர்பொலிக அசுரர்நலிக
அமரர்கள் புரியுமட னை நமன் 101


இரணியன் மார்புமெறுட்சாபச்சென் னித்
திரணிலத்தில் வீழ்த்தநரசிங்கம் விரத 102

மலையத்துவசவழுதிக்கிருகு
வலையத்துவசரித்துவணமை நிலைபெற்று 103


ஞானமுடன் வாழ்க நளிமீனலோசனமி
னானமகவையருட்செய்தோன் ஞானப் 104


புதுவையாள் பூமாலை பூட்டிமகிழும்
வதுவையாள்பூமாலைவண்ணன் மதுவைவென்றோ 105

நன்மைதிகழுஞ்செல்வி நாயகமாய்ச்சேர்ந்திருக்க
வண்மையுருவாய்வளர்ந்தோங்கிப் பொன்மினுடன் 106


இன்பத்துழவையிசைந்தமணியைச்சேர்ந்திங்
கன்புற்றவோதிமந்தானாகியே துன்பமற்ற 107


சங்குசக்கரஞ்சேர்ந்தவர்கொண்டுதொல்லையெல்லில்
மங்குல்செய்தமால்போல் வனஞ்சேர்ந்து பொங்கு 108


பலவாவிசேர்ந்து பதிமர்தமிட்கொண்டு
நலமானவாரணத்தைநண்ணிக் கலைமேவிக் 109


கட்டழகன்பார்புரக்குங்கண்ணனேயானதனால்
மட்டறநீர்ங்கேச வாத்திரியாய்ச் சட்ட 110


நாயகனுடைய தசாங்கம்

புகழ்தல்


விலங்கலிலேசிங்கமெனமேவுஞ்செயலால்
விலங்கலிற்சிங்காத்திரியாய்விள்ள விலங்கில் 111


நிரையெனவின்னானிலத்தில்நிச்சலுஞ்சூழ்ந்தோங்கும்
வரைநடுவோர் மால்விடையாய்மன்னிச் சுரிவளைகள் 112


(மலைச்சிறப்பு.)


சூலுழைந்து முத்துயிற்குந் தூயிடபவெற்பாகும்
மாலிருஞ்சோலைமலை யினான் ஞாலமதில் 113


நாட்கொண்டரிசனத்தை நண்ணிமுலைதான்மே வி
வாட்கொண்டகண்காதைமல்கியே வாட்கைதனைக் 114


கூர்ந்து சிலம்புபதங் கொண்டுகையிலேவளையைச்
சேர்ந்துமிகுகாரளகஞ்சேர்ந்தருளி யார்ந்தபன்முத் 115


தந்திகழ்ந்து சுந்தர ராசன்மார்பில்வீற்றிருக்குஞ்
சுந்தரவல்லியிணைசொல்லவே யெந்தன் 116

 

(ஆற்றின் சிறப்பு.)


நவக்கிரகத்தோஷம் நணுகாமலென்னைப்
புவிக்குளே காக்கும் பொருளாய்த் துவப்பார் 117

எழுந்தியுவந்திங்கேழுந்தியாய்த்தேவர்
தொழுதுபடிந்தாடுந்துறையாய் அழகாகி 118


நாலாயிரத்துநானூற்று நாற்பத்தெட்டின்
பாலானநோவும் பறந்தோடக் கோலமாய் 119


மேலாம்வைகுந்த விரசையேதானாகி
மாலாகமீது முத்துமலைபோலச் சாலவே 120


(
நாட்டுச்சிறப்பு.)


வந்துபித்துப்பேய் செவிடூமைகூன்முடக்குருடு
வந்து படிந்தோற் கொழிக்கவல்லமையா யந்தணனார் 121


போற்றுகின்றபூஜைநீர் பொற்சிலம்பிலோடியின்ப
தாற்றுகின்றதுய்ய சிலம்பாற்றினான் சாற்றும் 122


திருப்பாவையின்பத் திருமொழிசொல்நாவின்
அருட்கோதையுற் பவத்தினாலே தெருப்பதிமர் 123


தன்னிற்சடகோபர் தம்மை யுயர்வில்லிபுத்தூர்
மன்னிவளர்விஷ்ணு சித்தமாமுனியை இன்னிலத்தில் 124


ஏற்றமெனச்சொல்லு மியல்பாயகத்தியனார்
வீற்றிருக்கின்ற நல மேன்மையினால் நூற்றெண் 125


டிருப்பதியிற்சொல்லுந் திருவாய்மொழிக்கிங்
கருத்தஞ்சொலுந் தமிழ் மிக்காக் இருப்பதனால் 126


மின்னாடுஞ்சென்னாடு மென்னாடின்னாடெனச்சொல்
நன்னாடாந்தென்பாண்டி நாட்டினான் மின்னாம் 127


ஜெபசீலர்போற்றுந் திருமாமணிமண்
டபமேமணிமண்டபமாய்ச் சுபமாம் 128


(
ஊரின் சிறப்பு)


மனமகிழுந்திவ்வியவி மான மேசந்த்ர
னெனலாம்விமானமியல்பாய் வனமலையும் 129


மன்னீடியவிரசை யாறும்வனமலையு ம்
அந்நூபுர நதியுமாகியே பொன்னாளும் 130


சக்கியமாஞ்சுந்தரவல்லியாயத்தளை சூ
டிக்கொடுத்தாளாக இயம்பவே மிக்க 131


ஆனந்தமாயவற்று ளார்ந்திருப்போர்நெஞ்சில பி
மானந்திகழிவ்வயிணவராய் ஞானவொளி 132


மாலைச்சிறப்பு

சேரழகனேவாசு தேவனெனப்பாவலர்கள்
தேரவரும்வைகுந் தச்சீபதியான் வாரமுள 133
சித்தத்துழவமில்லாச்சீராழ்வாய்த்தேன்வண்டு
வைத்துழவம்பைந்துழப மாலையினான் சித்திதரும் 134


(
இயானைச்சிறப்பு)


முத்தமிழின் வேதமொரு மும்மதமாய்ப்பொங்கறிவு
துய்த்த பிரணவந்துதிக்கையாய்ச் சித்தமகிழ் 135


சங்கநிதிபத்மநிதி தானிருகொம்பாகிமலர்
மங்கையிருகொங்கைநிகர் மத்தகமாய்த் துங்கநால் 136


வேதமுயர்தாளாகி மேல்மந்திரத்துவயந்

தீதகலும் ஞானத்திரு விழியாய்ப் போத 137


வடகலையுந்தென்கலையும் வாய்த்தகனனதால்
வடிலாய்வைகுந்தம்வயிறாய் முடிவில்திரு 138


மந்திரமேதாணுவாய் மன்னியருக்கீன்றமணி
சந்திரருஞ்சூரியருந்தாமேயாய் நந்தகலும் 139


வைகான தம்பாஞ் சார்த்திரமேவன்புர
மெய்நாணதாகவிளங்கியே யெய்தாத 140


(
குதிரைச் சிறப்பு.)


துங்கவுலகுதுதிக்கும் வயிணவமே
அங்குசமாதானகளி யானையினான் புங்கமுற்ற 141


காற்கதியிலைந்துகதி காட்டிமனம்போற்கடிதாங்
காற்கதிபோலேநடையுங்காணவே பாற்கடலில் 142


வந்தபச்சைமால்ப்பச்சை மாலாய்வெள்ளிச்சிலம்பிங்
கந்தமுறலாஞ்சிலம்பத கியே விந்தைபெறும் 143


தங்கமலையாற்செய் சதங்கையாய்ச்சற்றுமொரு
பங்கமில்லாதபடிப்படியாய்த் துங்கசக்ர 144
வாளங்கடிவாள மாகமன்னிமாலண்ட்

கோளகைநேர் சேணத்தைக்கொண்டருளி நாளுமகிழ் 145


விண்ணார்சமுகமட்டு மேவியுயர்கல்லணைகொண்
டெண்ணமுறும்வாரியென நுரையும் பண்ணுமெத்தை 146


நண்ணியுபாயம்நாலும் நாற்பதமாய்
எண்ணுமெழுத்துங்கண் ணியல்பாகித் திண்ணத் 147

துவநிடதமேயவ் வுடலாய்த்தமிழ்வாற்
குவமானமாகியுரோமம் புவியிலனே 148


கச்சி நூலாகிக்கவின்சேர்ந்த சாம்புனத த்
துச்சிதமான உடுவினையே மெச்சி 149


இடையறவேசுற்றுமிசைத்தாதவனை
நடுநாயகமணியாய் நாட்டிவடிவாற்செய் 150


(
கொடிமுரசு ஆனைச்சிறப்பு)


பொற்சுட்டி நெற்றிதனிற் போர்ந்துகற்கிபொன்று வெள்ளை
வற்கமெனலாம்வேதவாசியினான் பொற்பரவு 151


மெண்டிருவோனாளா யிரந்ததலை மேவநலங்
கொண்டகெருடக்கொடியினான் மண்டலத்தின் 152


மன்றல்சேயந்தானம் வளரமரர்போலவுந்தன்
முன்றிலதிர்கின்றமணி மும்முரசான் கொன்றையுடன் 153


ஆராலும் வேணியானாலு மயனாலுமின்னம்
ஆராலுந்தள்ளவொண்ணா வாணை பினான் ஒருங் 154


கணிகண்ணன் போகின்றான் கச்சிநகராளும்
மணிவண்ணா நீகிடக்க வாண்டாந் துணியுடுத்த 155


சென்னாப்புலவனென் போகின்றேனீபடுக்கும்
பன்னாகம்பாய்சுருட்டிக்கொள்ளென்று முன்னாளில் 156


பாடியவாணன்பின் பணிப்பாய்சுருட்டியெடுத்
தோடினோன் பிற்றவன்சொ லுற்றுவந்தோன் றேடும் 157


திருக்குடந்தையிற்றுயில்காற் சென்னியெடுத்தண்ணாந்
திருக்கவிஞன்சொல்லுக் கிசைந்தோன் விருப்பமுற்ற 158


செந்தமிழின்னூற்புலவன் றேவடியாளைத்தழுவச்
சந்தவளச்செம்பொன்வள்ளந் தந்தபிரான் முந்தைதமிட் 159


செய்யுடந்தவிஞ்சையனைச் சீயர்தோட்கொண்டெடுக்கச்
செய்யதாள் வந்தணுகச் செய்யவலோன் றுய்யமன 160


வாஞ்சையுடன் கோமடத்தில் வாழ்பெரியஜிய்யர்வழி
யாஞ்சுந்தர ராஜ ஆசார்யன் காஞ்சனமாம் 161


செங்கமலச்செஞ்சாணைச் சிந்திப்பொன்குந்திநகர்
வெங்கடகிருஷ்ணனெனும் வேதியனென் இங்குரைத்த 162


வண்டமிழிலேபிரபந்த மக்கள் மதலைச்சொலையுட்

கொண்டுமகிழ்ந்தேகேட்குங் கொள்கைபோலண்டித் 163


திருச்செவியுட்கொண்டு சிரக்கம்பஞ்செய்து
கருத்துணினைக்குங் குறிப்பைக்கண்டு செருக்கிசைந்து 164


நந்தாதநன்மகவால் நன்மைவளர்செல்வமதாற்
சந்தானராஜனெனச் சாற்றவரந் தந்தருள்வோன் 165


எத்திசையிலுள்ளோரு மிவ்வைஷ்ணவத்திலன்
வைத்திசையிலெல்லோரும் வைகுந்த முத்திபெற்று 166


வாழ்ந்திடுவரென்று மனம்நினைந்துமரனாகி
லாழ்ந்திடுதற்காமென் றமைத்தருளிப் போழ்ந்தகன்ற 167


கண்ணுதலை நோக்கியிரு கைகூப்பியென்னோவென்
றெண்ணுதலை நோக்கி யியம்புங்கா லண்ணலே 168

நின்றேகமெல்லாம்வெண் ணீற்றையணிநீடுசடை.
யின்றேகமீதிலியற்றிக்கோ நன்றாம் 109

சிலமுனியைநின் பாலிற் சேர்தாமதமாய்ப்
பலவிதமாங்காதைசொலப்பண்ணு நலமில்லாத் 170

 

தானவரை நீமயக்கித் தண்மையினாலென்னில்வெள்ளி
யானவரையோ னளப்பாகி நானிலத்தில் 171

 

இந்தவிதஞ்செய்யிலெனக் கேதுகதியென்றுபய
தெந்தனழகற்கியம்புதலால் அந்திவண்ணா 172

 

இவ்வாறு நீபுரிதற் கேதுவிலக்காலுலக
மெவ்வாறிருக்குமெனி லேங்குரிசிற் செவ்வாயால் 173

 

சொன்னபடிகேட்டதனாற் றொல்லுலகையேமயக்க
அன்னவினையன்று முதலாதரித்தோ னன்னம்வயற் 174

 

றிண்டில்லையென்னுந் திருச்சித்ரகூடத்தி
னுண்டில்லையென்னுமுருவாள னண்டர்கட்குத் 175

 

தேவையினான்வாரிதிகழ் தேவையினான்மாமணியின்
கோவையினான்பூப்பூத்த கோவையி னானாவல் 176

 

புகனாதனாக்குமனம் பூட்சியுடன்போற்றிற்
செகனாதனாக்குமனசீலன் பகவன் 177

 

தருவோனாகுந்தானாகிச் செய்யு
மிருவோர்சொலும் பெயர்க்கிசைந்து மிருபாற் 178

 

குரியோனாம்வேத னுமைகேழ்வனுக்கும்
பெரியோனெனச்சொல்லும்பேர்பெற்று மொருகூடற் 179

 

கோவுமகிழ்ப்புதுவை கூர்மறையோ னாலுயரின்
மேவுகிளியற்றுவிழச்செய்துங் காவலவன் 180


சித்திராபவரணை உச்சபத்தின்
சம்பிரமம்


செவ்விழியிற்கண்டுமனந் தேர்ந்திடவுமெப்பொருட்குஞ்
செவ்விபெறுமூலந் தெரிவித்தேன் ஒவ்வாத 181

திங்கள் தனிலாதியாய்ச் சேர்வசந்தகாலத்திற்
றிங்கள் வளர்நாளிற்றிருமறையோர் பொங்குமறை 182


யாகமத்தினாலங்குராற்பணஞ்சேழும்நாட்
போகவரும்நாளிற்புதுமையாய் மோகமுற்ற 183


தங்கமெனும்பல்லக்கிற்றண்மலர்கள் தூவவிண்ணோ
ரெங்கள் பெருமா னெழுந்தருளத்துங்க 184


வடசொல்மறையுமதுரமாந்தேன்சொ
லுடன் வந்தமாமறையுமோதத் தடமாம் 185


முரசுபதினெட்டுமுழங்கநடமா
தரசியர்கள் நாட்டியங்களாடப் பெரிய 186


கவரிசுழற்றக் கவிகைநிழற்றத்
துவமாங்குழல்மிழற்றந்தோற்ற நலமாய்த் 187

திரமானகட்டியங்கள் செப்பயெச்சரீகை
பரபரே கென்று பகரக்குரவன்மனத் 188


தெண்ணியழகேச னிருபதம்பூ ஜித்துமகா
புண்ணியம்பெற்றபேர் பூண்டவனு மொண்ணிதியால் 189


அண்ணுந்திருப்பணிசெய் தண்ணல் வீட்டெய்துவ ழி
பண்ணுமலையத்துவச பாண்டியனும் விண்ணுலகில் 190


ஒரிருவரோர்மூவ ரோர்நால்வரோரைவர்
ஓரறுவரோரெழுவ ரோரெண்மரோரொன் 191


பதிமர்பதிமா பதினொருவர்விண்ணில்
முதலான முப்பத்துமூவர் துதிசேர் 192


கருடன நுமன் கரங்குவித்துவேத
புருடனெனமருங்கிற்போக மருடீர் 193


பதினெண்புராணம் பகரும்வியாதன்
முதலாமுனிவோர்கள் முற்றுஞ் சதிரிள 194


மாதரெழுமாதர்நதி மாதரிருமாதரர
மாதர்புவிமாதர்முனி மாமாதர் போதசித்த 195


மங்கையர்கள் கந்திருவ மங்கையர்கள் கின்னரர்தம்
மங்கையர்கள் கிம்புருட மங்கையர்கள் எங்கள் 196


தொழுபத்தினாலுமறைச் சொற்பொருள்சேர்நெஞ்சத்
தெழுபத்தினாலாரியரும் வழுவசலும் 197


அந்த அஷ்டதிக்கயமா மாசாரியர்பணிய
வந்தமணவாளமாமுனியுங் கந்தமுடன் 198

றேனமருந்தார்மார்பர் சீரங்கராஜபட்ட
ரானபிரபலஞ்செறியு மர்ச்சகரும் நானிலஞ்சேர் 199

மாயவிருள் போக்கி மாஞானமானவொளி
மெயதிரிதண்டுகையில் மேவியே நேயமுடன் 200


தீயதகற்றுந் திருமாலிருஞ்சோலைச்
சீயரெனவந்த தெருள் முனியுந்தூய 201


விழித்துயரப்போற்றியதால் மென்றீபங்கொண்டு
வழித்துணையாய்முன்புவரவே தொழிற்பெருமை 202


பொற்பாய்ப்புரிந்து புனைந்துமிகுமெஞ்ஞானத்
தற்பாற்றிருமாலையாண்டானும் நற்பெருமான் 203


வாழித்திருநாம மன்னிய ஆசார்யனெனுந்
தோழப்பரென்னவருந் தூயோனு மூழிதொறும் 204


ஆரணம்பூசிக்கு மதுபோலநால்வேத
பாரராய்வந்தருளும் பட்டர்களுஞ்சீர்கட் 205


குமுதாரவள்ளலுக்குங் கோவா மொழியில்
அமுதாரழஇனமுதாரும் விமலமுடன் 206


விட் பாற்றவழ்ந்தபிறை மீதூர்திருமலைக்கு
நட்பாந்திருமலை நம்பிகளுமுட்புகழ்தல் 207


பம்புபத்திசெய்து நம்பும் பண்பினாற்சோலைமலை
நம்பியெனவந்த நயகுணனும்அம்பிகையைப் 208


புல்குஞ்சிவாதியற்கும் போதப்பிரசாதமதை
நல்குஞ்சடகோபநம்பியளும் நல்விதமாம் 209


சங்கூர் செகந்தாஞ்சேர் தையலார்மையலை ம
னங்கூரலங்காரநம்பியளும் அங்காச் 210


செகாதிபர்கள் வந்துதினந்தெண்டனிடுந்தெய்வ
சிகாமணிநம்பியுஞ்சீர்சேர்ந்து மகாகு 211


வலையம்புகழ்ந்ததிரு மாலிருஞ்சோலைமலை
மலைநம்பியானமகவானும் மலர்மான் 212


திடமாமலைநிகருந் திண்புயத்திற்சேரும்
வடமாமலையமுதார்மா லுஞ் சடமாய்ப் 213


பொன்புரையுமேனிதிகழ் பொற்றோளழகனுக்கிங்
கன்புதியாகஞ்செயமுதாரும் நன்குதிகள் 214


சேனையமுதாராந் திறலோனுமைந்தருவை
வனைநிகர்பண்டாரிமன்னவனுங் கோனெனவாழ் 215

மாலைப்பரவிவழுத்திருமாலிருஞ்
சோலைப்பிரியரெனத்தோன்றினனுஞ் சீலமன 126


தொன்றாகப்போற்றிநல மோங்கழகற்காளாகி
நன்றாகவாழ்ந்திருக்கும் நாயகமுங் குன்றாத 127


ஏழெட்டுத் தெய்வத்திருப்போர்முதற்புவியீ
ரேழுற்றிருபேருமீண்டியே வாழ்வுபெற 218


நீகாவெனச்சிறப்பு நெமித்தோர்க்கன்பாகி
வாகாய்த்தல்லாகுளத்தில் வந்தருளி மேகம்வந்து 219

வைகுந்தரங்கம் வளைந்துபூலோகத்தில்
வைகுந்தலோகமின்று வந்ததென வெய்தவே 220


தேவலோகத்திந்திரவிமானந்தா னோ
மேவவருஞ்சந்திரவிமானமோ பூவுலகில் 221

ஒங்கிய செல்வத்துவந்த குபேரன்பால்முன்
வாங்கியபுட்பகவி மானமோ பாங்குவணி 222


ஆணிப்பொன்னாலியற்றி யன்றுமலையத்துவசன்
காணிக்கைதந்தநல் காட்சியோ பாணிப்பாய் 223


மேருகிரிதன்னை விமானமாய்விஸ்வகர்ம
னேருடனே செய்திவருக்கீய்ந்ததோ பார்புகழ்நால் 224


வேதாங்கமான விமானமோவஷ்டாங்க
நாதாங்கமானவிமானந்தானோயேதென் 225


றிதையுமெண்ண விண்மணியு மிவ்வொளிகாணுங்கா
லுதையனாய்க்கீழ்ப்பட்டுலவும் விதமெனவே 226


வெம்பரிதிதோன்றில் விமானமேற்கொண்டபரி
யெம்பிரானேறி யெழுந்தருள இம்பரிலே 227


ஏர்ச்சப்பரலோக மீதெனவெலாமிச்சி
வேர்ச்சப்பரம்ஞாங்கர் மேவிவரச் சேர்க்கையொடும் 228


நரவெள்ளமாயன் னயனவருளான
திரைகடலைநண்ணலெனச்சீர்சேர்ந்து வரவிலகி 229


மின்னியதங்க மிகுகுடைகளோர்கோடி
யுன்னியவெள்ளிக்குடைய ளோர்கோடி துன்னிய 230

விற்கொடிகளோர்கோடி வெண்கவரி கோடிநல
வற்கமெனுமாலவட்ட மதுகோடி பற்கவின்சேர் 231


ஒண்கோடிவாத்யவகை யொன்றுக்குயர்ந்தபதி
னெண்கோடிவாரிசெவிடிட்டுவரத் திண்கிரிசேர் 232

சுந்தரராஜன் வந்தான் சுந்தரத்தோழன்வந்தான்
செந்தமிழோர்க்காடித் தியாகன்வந்தான் எந்துழபக் 233


கோபனவனாகவிளங் கும்பரமசாமிவந்தான்
சோபனகல்யாணகுண தூயன் வந்தான்றாபரிக்கும் 234


பாண்டவர் தந்தூதன்வந்தான் பார்த்தெடுத்திங்கென்னையின்னாள்
ஆண்டவன் வந்தா னழகன் வந்தான் பாண்டியர்கள் 235


தங்கள் குலத்தெய்வ வைகுந்தக்காத்தான் வந்தான் பொன்
நங்கள் குன்றம் வீற்றிருக்கும் நாதன் வந்தான் அங்குலவும் 236

 

முன்னழகும் பின்னழகு மூதுரையாம்பேரழகு
தன்னழகாமென்னழகன் றான்வந்தான் பொன்னலராந் 237

 

தங்கரத்திலுத்யோக சக்கரத்தான் வந்தானென்
றெங்குமொலிக்கின்றசின்ன மேயூகச் சங்கையிலா 238


ஆளைத்திரண்மேக மாகியதன் மேற்பேரி
சோனைப்புயல்முழக்கந் தோற்றமாய் மானச் 239


சிவிறிமழையாகத் திகழ்வருணனாவல்
கவர்வாய்ப்பணியவரல் காண நவிர்பெறவே 240


சேகரமாய்த்தானடனஞ் செய்துசதிதப்பாமற்
பாகவதரஷ்டபதி பாடிவர வாகுடனீர் 241


கண்டுளும்பநெஞ்சங்கனிந்துரோமம்பொடிப்புக்
கொண்டுஞானந்தக் கோமளமாய்த் தொண்டரெலாம் 242


தேகமறியாதுகர தீபமெடுத்தாடியும
நேககுழாந்தாதர் நெருங்கிவர வேகவதிக் 243


கண்ணகலுமாறனேகந் திருக்கண்பெற்றது போ
லெண்ணில் திருக்கண்சாத்தியெங்குமா யுண்ணிறைந்த 244


மாமாலையுற்றபுது வைக்கோதையாரனுப்பும்
பூமாலைவாங்கிப்புயத்தணிந்து வாமநிறை 245


யாயுமகவான் செல்வமார்ந்தணைவிவாழ்ந்து பின்னர்
மாயமகல்வைகுந்தம் வாய்க்கவே ஓயாது 246


பல்லாயிரங்கொப் பரைதனிலே காணிக்கை
யெல்லாருமீய்ந்துவர மெய்தவே செல்லேறி 247


அண்டியூர்போற்சிகர மம்பொன்மதில்சூழ்ந்தொளிரும்
வண்டி யூர்மண்டபத்தில் வந்தருளி விண்டலரும் 248


செங்கதிரோன்மாயன் றிருவிளாச்சொல்லியந்தத்
திங்களையுங்கூட்டிவரச் சென்றதெனக் கங்குல்புகிற் 249

பூரணசந்த்ரோதையமாம் போழ்திலெரியாடுகின்ற
காரணம்போலாம்வாணக் காட்சியுடன் நீரானவும்

 

 


(
நாயகனை நாயகிகண்டு புலம்பல் )


வையைநதிநோற்றபலன் வாய்க்கவானோர்மலர்தூய்க்
கையையொடுங்கக்குவித்துக் கண்டிருக்கச் செய்யகர 251


தீபமுடனார்க்கு மனந் தேடும் பொருளீயந்தருள்பிர
தாபனெனவந்த தயாநிதியைப் பூபதியைத் 252


தெண்டனலங்கலணி சேடன் மீதிற்பவனி
கண்டேன் பணிந்தேன் களிகூர்ந்தேன் அண்ட 253

மணிமுடியைக்கண்டு வணங்கினேன்றிங்கள்
அணிமுகத்தைக்கண்டுவகையானே றணிவிலெட்டாந் 254


திங்களெனும்நெற்றிகண்டு சிந்தித்தேன்செண்பகமூ க்
கங்கமுடன் கண்கண் டதிசயித்தேன் செங்குழைசேர் 255


குண்டலத்தைக்கண்டன்பு கொண்டாடியாங்கவனை க்
கண்டணுகி முத்தமிடக்காதலித்தேன் வண்டமரும் 256


செங்குமுதச்செம்பவளச் செவ்வாய்கண்டாதரவு
பொங்கிவரலாயூறிப் போந்திருந்தேன் சங்குகண்டு 257


பாரித்தமேருப்பருப்பதத்தோள் கண்டுமுலை
பூரித்துவிம்மிப்புலம்பினேன் மார்பத்து 258


மாமாதைக்கண்டு வருந்தினேன் வாரமற்று
பூமாதைக்கண்டுபொலிவழிந்தேன் பூமேவும் 259


பேரானவுந்தியையும் பீதாம்பரங்கள் புனைந்
தேராந்துதிக்கையிணைத்துடையும் வார்சடையில் 260


நீரிட்டதாளையுங்கண்ணேரிட்டழகனெனப்
பேரிட்டவரே பெரியவரென் றோரவே 261


கண்டேனென்மோகங் கரைகாணேன் காவெனச்சொல்
விண்டேனெவற்குமிதுவிள்ளேனே கண்டு 202


மறந்தேனினவுடலமாம்பயலைப்பூத்தேன்
றுறந்தேனணிபிரமைசூழ்ந்தேன் சிறந்தகழை 263


வில்லுடையவனசா மென்முலைமேல் வெளவிடலாற்
சல்லடையும்பலகணியுந்தானானேன் அல்லிமலர்ச் 264


செங்கைவளையாழிதனைச் சிக்கெனவேகொண்டுமலர்
அங்கவளையாழியென வாதரித்தீர் செங்கொடிய 265


தரகவரும் நுண்ணிடையி லார்ந்திருக்கச் சுற்றியவென்
னாகமோநீர்புனையும் நன்னாகம் மோகத் 266

இராமாயண ஏலப்பாட்டு


இங்கிலங்காநகரவாருலின்பாலே

யிட்டபடையைக்கவிவளைந்ததன்மேலே
அங்கதன் றூதுபோயிராவணன் தன்னை

அம்மையை விடுத்திடில்லாவிடிலோவுன்னை
அங்கம்பிளந்திட இடிப்பனிதுமெய்தான்

அதுகண்டாக்கன் சினந்தவுரை செய்தான்
கிங்கரர்கடொட்டவரைவீசினாரங்கே

கிளம்பியங்கதன்வந்துரைத்தானேயிங்கே
அங்கதைக்கண்டிருவர்படையுமென்மேலே

அண்டிவந்தேசண்டைசெய்ததக்காலே
எங்குநிறைராக்கதர்கள்கரிபரிகள்கூட

எறியீட்டி விற்கத்திதடிகொண்டுசாடச்
சங்கமாம்வானரர்களுடனேயறிந்தார்

தாங்களுஞ்சிலைமலை கண் மரம்விட்டெறிந்தார்
இங்கிருவருஞ்சண்டை செய்தததிகோரம்

இருபடைகளுஞ்சென்றுபோனவையபாரம்
போக்கியேராவணன்றேர்கொண்டு நேர்ந்தான்.

போரிலநுமான்குத்தவீறிட்டுவீழ்ந்தான்
அங்கெழுந்தேவேல்விடத்தம்பிநொந்தான்

அசையாதவிளை யோனையநுமான்கொணர்ந்தான்
எங்கடாவெனச் சிறிராமன் மேற்சென்றான்.

எல்லாமிழந்தொன்றியாகியேநின்றான்
பங்கமானாயினிச்சீதையைத்தாடா

பாரினிச்சண்டையென்றானாளைவாடாயென்று
தங்கருணை செய்ராமனுரைகொண்டுதாவித்

தந்தம்பிக்கும்பகன்னனையழைத்தேவி
நங்கமதுவிண்டிடுமிராவணன்றன்னை

நாடியத்தம்பியுமுரைப்பானே பின்னை
செங்கனலை வாரிமடி தன்னிலேகட்டுஞ்

செய்தியிப்போதுவிச்சீதையான முட்டும்
தங்கிவந்தேயாட்டை மாட்டைக்கடிக்கத்

தானதன்மேலுமானிடனைப்பிடிக்க
வுங்கருதுவதுபோன் மிகுந்த சிறைகொண்டாய்

விதிமுடிந்தேசீதையென்றவிடமுண்டாய்
விங்களங்கண்டநீயினியென்னசெய்வாய்

வீடணன் சொற்புத்திவிட்டெங்கேயுய்வான்
என்கின்றதைக்கண்டரக்கண்வெகுண்டு

ஏதென்றுதான்படபடத்துங்கண்டு
என்கரத்தாலடிப்பேனென்று கூறி

எதிரிடுங்கும்பகன்னானையையன்சீறி
புங்கமாய்க்கணைவிடுத்திவர் சண்டையாலே

புரண்டுதையாரத்தவெள்ளமென்மேலே
சங்கையின் றிக்கும்பகன்னமராடத்

தான்கண்ட துண்டமாகச்செய்து போட
ஒண்கணைதொடுத்தானேயிரவிகுலமன்னன்

உடனேபதைத்து வீழ்ந்தான் கும்பகன்னன்
துங்கனதிகாயன்மகராட்சன்முதலோர்கள்

சூழ்ந்துவந்தையன் பால்விருந்தார்கள்
இங்கிதைக்கண்டிந்திரசித்தனுகைத்தான்

ஏதடாவென்று தன்மூக்கில்விரல்வைத்தான்
பின்கடுங்கோபமாய்வெகுசேனைசுற்றிப்

புறப்பட்டதென் கற்றமாயைப்பற்றி
ரங்கமதிலேவந்துசரமாரி தூறி

நின்றதைக்கண்டுராமாநுஜன் சீறச்
செங்கரத்தாலம்புவிட்டமர்தொடுத்தான்

தீயனிரவின்னாகபாசம் விடுத்தான
எங்கருடனும்வந்துவேதனைகளைந்தான்

எல்லோருமெழுமுன்னமிளையோனெழுந்திருந்தான்
கிங்கரரெனும்பூகபதிரெதிர்த்தார்

தேசத்தினாற்செய்யமினிவழிமிதித்தார்
கங்குலில்வந்துபிரமாத்திரம்வீசிக்

கட்டினானிந்திரசித்தென்னும்விநாசி
அங்கதைக்கண்டுசாம்பன் கூறவுந்தான்

அநுமந்தன் சஞ்சீவிமலைகொண்டுவந்தான்
கங்குகங் காய்க் கீழ்விழுந்தவெகுவெள்ளக்

கவிகளிலையோடனெழுந்தது கணமெல்ல
வெங்கணானிந்திரசித்தன்மாயா சீதை

வெட்டவுங்கண்டவநுமகதனப்போதே
மங்கியலறிச்சாமிமுன்னிலறிவித்தான்

மயங்கினானய்யனகொடுககவிடை பெற்றான
லங்கையுள்ளென்றாயைவீடணகைண்டான்

நிகும்பலயாகமெனரகுபதிவெகுண்டான்
தன்கணைகொடுத்தேவவந்தவிளையோனுந்

தாநிகும்பலையிந்திரசித்தனென்பானும்
அங்கைகொண்டேயத்திரததிரங்கள்விட்டு

அமர்செய்யவிந்திரசித்தன்மாயைவிட்டு
மங்குலின்மறைந்திடத்தம்பிகணைதொட்டான்

மாபாவியிந்திரசயித்தனடிபட்டான்
தன்குமரனும் போனதைக்கண்டுநொந்தான்

சதுரங்கமான வெகுசேனை விடவுந்தான்
பொங்குகடல்போலவே மூலபலம்வந்து

பொருதவய்யன்மோகனாத்திரம்விழுந்து
அங்குவெகுராமனாய்த்தோற்றியவருள்ளம்

அவர்க்கவரடித்து வீழ்ந்ததிகோடி
இங்கிதைக்கண்டுடனிலங்கேசன்வெற்றி

இரதமேற்கொண்டு வெகுசேனைகள் சுற்றித்
திங்களுதயம்போலமா தலிகொணர்ந்த

தேரேறிவருராமனைக்கண்டு முந்த
புங்கானுபுங்கமாய்ச்சரமாரிவிட்டுப்

போரிடச்சாமிபிரமாத்திரம்பட்டு
அங்கொருமலைக்குநிகராகமண்மேலே

அந்தராவணன்விழுந்தான்கொடுமையாலே
விண்கலந்தேயண்டர்பூமாரிபெய்ய

வீடணன் சென்றறக்கன்கடன் செய்ய
வற்கணவிபீஷணற்கய்யனருள் யோகம்

மன்னனிளையோன்செய்துவைத்தத பிஷேகம்
மங்கையாஞ்சனகியைராமனழையென்றான்

மாருதிமகிழ்ந்தோடிவரவேணுமென்றான்.
நங்கை ஜானகியுடன் சாமியிடம் வந்தாள்

நாதனெண்ணங்கண்டு தீயிற்புகுந்தாள்
அங்கியுமுடன்வெருவியம்மையையெடுத்தான்

ஆருமிணையிலையென்றுசாமிமுன் விடுத்தான்
அங்கயனரன்றேவராருந்துதித்தார்

அய்யனத்தசரதன் செய்யுதவிபெற்றார்
மக்களமதாய்ச்சீதையைக்கொண்டுதேறி

வான ரருடன்புட்பகத்தின்மேலேறிக்
துங்கநதர்கண்டுதிருவணைதன்னையேத்திச்

சொல்லிவரவேயெங்களம்மைசெவிசாற்றி
அங்கிருந்தேவந்துகிட்கிந்தைநாடி

அந்தவானரமந்தரனைவருங்கூடிப்
பைங்கடர்மலைந்திகடாண்டியேவந்தான்

பாலகவியாஞ்சீனிவாசனையுகந்தான்
நன்குருவெனும்பரத்துவாசன்களிப்ப

நாடியவனாச்சிரமநிண்ணுகடாகப்பல்
அங்கமுனிகூடி- ஆதித்தநீடி

அருமைகொண்டாடி அநுமானை காடி
அன்பாற்பரதன்பாற்சென்றுமுனபால்ராமனும்பாரென்று

அண்டிச்சொல் - விண்டிட்டவர்
பண்டிப்புவி- உண்டிட்டவர்


ஏலேலோராமஜெயம்.
உயுத்தகாண்டம் -முற்றிற்று.



ஸ்ரீராமஜெயம்.
ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம்


தேசமெல்லாம்துதித்திறைஞ்சு மிராமன்

சீர்பட்டாபிஷேகமிது
ஆசிகொண்டுபரத்துவாசன்றிரு

வடிவணங்கிச்சேனையுடன்
மாசகலுங்குகனைக்கண்டு சாமி

மகிழ்ந்துநந்திக்கிராமஞ்சென்றார்
நேசமுள்ளபரதன்றம்பி தாய்மார்

நெடுநகரார் துதித்துநின்றார்
தாசனாம்பரதனவ்விராகவனைவேண்டிச்

சடைசோ தாஞ்செய்தயோத்திலேதாண்டி
வாசவன்பதிபோலலங்காரமின்னம்

வாழைகமுகாம்பந்தன் மேற்கட்டி சொன்னம்
தூசுடன் பழவகையை தேகங்கன்கட்டித்

தென்னகரயோத்திமனைதோறுமிதில்ரெட்டி
வாசமாஞ்சந்தநந்தூபதீபங்கள்

வருஷிக்கமலர்மாரிநானாவிதங்கள்
ஓசை கடல்போல்மேளதாளங்கணீடி

உடனம்பரத்திலும்பர்கள் வந்துகூடி
வாசிக்கும்வீணையொடு துந்துமியடிக்க

வந்தங்கரம்பைமுதலானோர் நடிக்கத்
தேசமைம்பத்தாறிலேநான்குவன்னஞ்

செனங்கணிபுடாயமானங்களாமின்னம்
காசினியிலுண்டான தீர்த்தமொருமிக்கக்

கடலுள்ளதீர்த்தங்கள்கவிகொண்டுவைக்கப்
போசனங்கள் செய்துவைத்தார்கள் பூரி

பூசுரர்க்குச்சொரித்தார்சொன்னமாரி
தாசிகள்நடத்திடத்தேரொன்றிலேறித்

தாசரதிவாராமஜயமென்று கூறி
ராசர்கள்சேனைசூழப்பவனிவந்தான்

ராகவன் பரதனசெய்மண்டபமிருந்தான்
பூசுரரனேகராய்க்கூடிவந்தங்கே

புரோகிதர்வதிட்டர்முலோர் செய்கடங்கே
மீசுரமதாவக்கினிவளர்த்தோமம்

வேண்டியது செய்ததிலளித்ததிஹேமம்
ஆசையொடுராமனைச்சிங்சாதனத்தில்

அன்னைசானகியுடன்வைத்தார்களத்தில்
ஈசனயனிந்திரன்முதலோர்களிக்க

எண்டிக்கரும்பணிகள்கொண்டங்களிக்கச்
சேஷனுந்தம்பியுஞ்சாமரம்வீசச்

சேர்ந்துபரதன் குடை பிடித்தங்கேபேசக்
கூசலாய்மந்திரிகள்வந்தெச்சரிக்க

கொண்டாடியனுமந்தாள்பிடிக்கப்
பூசையாய்த்தீர்த்தங்கள் கொண்டுமுனிபெய்தான்

புவிராமபட்டாபிஷேகமதுசெய்தான்
கேசவரையாயலங்காரஞ்செய்வித்தான்

கிரீடத்தைராமன்சிரத்திற்பதித்தான்
கோசலேந்திராவென்று கூவித்துதித்தார்

கும்பிட்டிறைஞ்சியெல்லோருங்கதித்தார்
ஏசறுமயோத்திமங்களவாத்தியவோசை

யெண்டிக்கிலும்பரவமண்டிச்செய்பூசை
சூசனையதாய்ப்பெண்கள் சோபநம்பாடிச்

சுற்றிவந்தார்கள் முத்தாரத்தினீடிக்
கூசிவந்தேமாதர்சுபமங்களந்தான்

கூறினாராமற்குஜயமங்களந்தான்
யோசனைகளேனென்றிராசருங்கிட்டி

உடனேபணிந்தார்கள்கப்பங்கள்கட்டித்
தேசராசர்க்குவெகுமானம் செய்தான் தான்

ஸ்ரீரங்கநாதனைவிபீஷணற்கீந்தான்
தாசரதிதேசங்களெல்லாமுனைந்து

தன்னுயிருமன்னுயிருமொன்றாய்நினைந்து
மோசமேதாறிலோர்கடமைதான்வாங்கி

முழுதுமோர்குடையிருந்தாள்மனதோங்கி
ராஜாதிராஜனாய்ச்செங்கோலையேந்தி

ராச்சியாகாரம்நடத்தின து சாந்தி
தேயுள்ளபூர்ணசந்திரோதயம்போலே

செழிப்பாய்விளங்கினான்றருநெறியாலே
பேசியிதுகேட்பவர்கணமனதிச்சையெல்லாம்

பெற்றுவாழ்வார்களென்பதுமுனிவர் சொல்லாம்
பாசவினையகலும் படிக்கருண்மிகுந்தான்

பாலகவியாஞ் சீனிவாசனையுகந்தான்
நேசமுட னெல்லோருமேறிவருங்கப்பல்

நிலையயோத்தியில்வந் துநின்றுதடாகடபல்
மாசில்வெகுநாமன்வரழ்பரந்தாமன்

மலர்முகச்சோமன் - வந்தரகுராமன்
மாட்சிமையபேட்சிக்கக் கடாட்சிசர்வசாட்சியென்று

 

வந்திக்கவு - கந்திச்சையை
முந்தித்தருவன்றற்பரன்


ஏலேலோ - ஏலேலோ
ஏலேலோ - ராமசெயம்
இராமாயண ஏலப்பாட்டு

முற்றிற்று


சீதாலட்சுமண பரதசத்துருக்கன் ஸ்ரீராமச்சந்திரசுவாமியேநமா
மேற்சொல்லிய சென்னையில்வாழ் கோமளபுரம்
இராசகோபாலபிள்ளையவர்கள் - இயற்றியது.
எழுசீர்க் கழிநெடி லாசிரியவிருத்தம்.


பொன்னெயிர்க்கோயில்வேதியர்திலகன் புகழ்பெறுசீனிவாசப்போர்
மன்னியபாலகவியுளநயந் துமாதர்கள்சிறுவர்களானோர்
பன்னிபந்துளவப்பரமனொண் சீரைப்பாடுவானியற்சொலான்முற்றும்
நன்னடை எலப்பாட்டெனராமாயணத்தினை நல்கினன்கே.

Comments